திருவண்ணாமலை: 100 நாள் வேலையின் போது மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: 100 நாள் வேலையின் போது மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழப்பு
X
திருவண்ணாமலை கொளக்கரவாடி பகுதியை சேர்ந்த வாலிபர் 100 நாள் வேலையின் போது மயங்கி விழுந்து உயிரிழப்பு.

திருவண்ணாமலை கொளக்கரவாடி பழைய மண்ணை பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 28). இவர் பழைய மண்ணை கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கணபதி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி