திமுக ஆட்சியில் வழங்கிய நலத்திட்ட உதவிகள், கணக்கெடுக்கும் பணி துவக்கம்
நிர்வாகிகளிடம் படிவங்களை வழங்கிய சரவணன் எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் திராவிட மாடல் ஆட்சியில் வழங்கிய நலத்திட்டங்கள் உதவிகள் கணக்கெடுக்கும் படிவத்தை சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, திராவிடம் மாடல் ஆட்சியில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் கணக்கெடுக்கும் படிவத்தை வழங்கி பேசிய கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன்,
திராவிடம் மாடல் ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்தும் தமிழக அரசின் மூலம் பொது மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைந்துள்ளதா என்பது குறித்தும் கணக்கு எடுப்பதற்காகவும் மேலும் பொது மக்களுக்கு தேவையானவற்றை நாம் அறிந்து கொள்வதற்கு இந்த படிவங்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தேர்தல் பணி குழு உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று இந்த படிவத்தை வழங்கி பொதுமக்கள் தமிழக அரசின் எந்தெந்த நல திட்ட உதவிகளை பெற்று உள்ளார்கள் என படிவத்தினை பூர்த்தி செய்து பெற வேண்டும். குறிப்பாக இலவச பேருந்து பயணம், பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் ,கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை, விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி உள்ளிட்ட நல திட்ட உதவிகள் சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது என தெரிவித்தார்.
புதுப்பாளையம் பேரூராட்சியிலும் உள்ள 12 வார்டுகளிலும் நல திட்டங்கள் உதவிகள் கணக்கெடுக்கும் படிவத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் செல்வபாரதி, நகர செயலாளர் ,மாவட்ட அணி அமைப்பாளர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கிளைச் செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu