கலசப்பாக்கம் பகுதியில் கோயில்கள் புனரமைக்கும் பணி தொடக்கம்

கலசப்பாக்கம் பகுதியில் கோயில்கள் புனரமைக்கும் பணி தொடக்கம்
X

கோயில்களின் புனரமைப்பு பணியை தொடக்கி வைத்த சரவணன் எம்எல்ஏ

கலசப்பாக்கம் பகுதியில் ரூ 10 லட்சம் மதிப்பில் ஐந்து கோயில்கள் புனரமைக்கும் பணிகளை எம்எல்ஏ தொடக்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் உள்ள ஐந்து கோயில்களுக்கு ரூபாய் பத்து லட்சத்தில் புனரமைக்கும் பணியை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கலசப்பாக்கம் பகுதியில் உள்ள தென்னகரம், ஆணை வாடி, பூண்டி, எலத்தூர், ஆதமங்கலம் ஆகிய ஐந்து ஊராட்சியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு புனரமைக்கும் பணியும், பக்க சுவர் அமைக்கும் பணியும் அமைத்துக் கொடுப்பதற்கு என்னிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் இந்த ஐந்து கோயில்களுக்கும் தமிழக அரசின் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடமும் , பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அவர்களிடமும், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களிடமும் கோரிக்கை வைத்து இந்த கோயில்களுக்கு புனரமைக்கும் பணியையும் பக்க சுவர் அமைக்கும் பணியையும் நிறைவேற்றித்தர வேண்டுமென்று கேட்டிருந்தேன்.

அதன் அடிப்படையில் கோயில்கள் புனரமைப்பதற்கு நிதியை 5 கோயில்களுக்கு தலா 2 லட்சம் என நிதி ஒதுக்கீடு செய்து ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு இந்து சமய அறநிலையத்துறை மூலம் 5 கோயில்கள் புனரமைக்கும் பணியை துவக்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது.

அதன் மூலம் இப்போது இந்த கோயில்களுக்கு புனரமைக்கும் பணியை இப்பொழுது தொடக்கி வைத்துள்ளோம். விரைவில் இந்த பணிகள் முடிந்து கோயில் திருப்பணி முடிந்தவுடன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், மேலும் இந்த கோயில்களுக்கு இன்னும் பல திட்டங்கள் இந்து சமயஅறநிலையத்துறை மூலம் அமைத்து தரப்படும் என எம்எல்ஏ சரவணன் கூறினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் அன்பரசி ராஜசேகரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நடராஜன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள், இந்து சமய அறநிலைத்துறை உதவியாளர் வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!