/* */

கிராம சபை கூட்டத்துக்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

காஞ்சி ஊராட்சி கிராம சபை கூட்டத்துக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கிராம சபை கூட்டத்துக்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
X

 வாக்குவாதத்தில்  ஈடுபட்ட பொதுமக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்துள்ள தேவிகாபுரம் ஊராட்சியில் 2023 - 24ஆம் ஆண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டம் தயாரித்தல்,உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கிடேசன் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மல்லிகா திருநாவுக்கரசு வரவேற்றாா்.

கூட்டத்தில், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள 12 வாா்டுகளிலும் குடிநீா், சுகாதாரம், சாலைப் பணிகளை மேற்கொள்ளுதல், தெருக்களில் மின் விளக்குகள் அமைத்தல், தேவரடியாா் குளம், கட்டாராங்குளம் ஆகிய இடங்களில் பூங்கா அமைத்தல் உள்பட 2023 - 24ஆம் ஆண்டுக்கான பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தயாரிப்பது குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சிச் செயலா் சங்கா் தீா்மானங்களை வாசித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராதா சின்னகாசி, கணேசன் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தணிக்கை உதவி இயக்குனர் கருணாநிதி கலந்து கொண்டார் . வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தண்ணீர் சிக்கனத்தின் அவசியம் குறித்து அதிகாரிகள் சிறப்புரையாற்றினர். இதை தொடர்ந்து அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் சார்பில் சம்பந்தப்பட்ட துறைகளில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர் ,சாலை வசதி ,கால்வாய் வசதிகள் முழுவதுமாக செய்து தரப்படவில்லை எனவும் சரிவர குடிநீர் இல்லாததால் மிகவும் கஷ்டமாக உள்ளதாக கூறி சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளை முற்றுகையிட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் திட்டங்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது, அது அனைத்தும் முறைப்படுத்தப்பட்டுள்ளதா, என கேள்விகளை எழுப்பினர்.

மேலும் முறையாக வார்டு உறுப்பினர்களையே கிராம சபை கூட்டத்திற்கு அழைக்கவில்லை அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யாமல் உள்ளதாகவும் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு கிராம ஊராட்சியில் செய்யப்பட்டிருக்கும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

கிராமசபை கூட்டத்தில் அரசு பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள்

செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அல்லியந்தல் ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் பார்வைக்கு எந்த ஆவணங்கள் காண்பிக்காமல், பொதுமக்களின் கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் கோரிக்கை மனுக்கள் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படததால் அதனை கண்டித்து பொதுமக்கள் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாய்ச்சல் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சியில் காளிகாபுரம் கிராமத்தில் உலக தண்ணீர் தினம் முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது ஊராட்சி ஒன்றிய தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார் இதில் சில படைப்பாளராக போளூர் ஒன்றிய சாலை ஆய்வாளர் ஜெயசீலன் பங்கேற்றார் இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தாமரைச்செல்வி ஊராட்சி மன்ற செயலாளர் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 March 2023 2:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...