டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி பணம் பறிப்பு

டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி பணம் பறிப்பு
X
திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலையை அடுத்த காஞ்சி காமராஜ் நகர் டாஸ்மாக் கடையில் கீழ்பாலூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 43) விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இரவு விற்பனை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, மர்ம நபர்கள் சரவணனை தாக்கி கத்தியால் குத்தி ரூ.10 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது சம்பந்தமாக கடலாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதே போன்று திருவண்ணாமலை அடுத்த கெங்கம்பட்டு டாஸ்மாக் கடையில் ஆலத்தூர் அடுத்த விஸ்வநாதபுரத்தை சேர்ந்த விஜயகாந்த் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் இரவு விற்பனையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய போது விஸ்வநாதபுரம் அருகே மர்ம நபர்கள் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் செல்போன், டாஸ்மாக் கடையின் சாவி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இது சம்பந்தமாக திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்