கலசப்பாக்கத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரண பொருட்கள் வழங்கல்

கலசப்பாக்கத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரண பொருட்கள் வழங்கல்
X

ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு உபகரண பொருட்களை ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் வழங்கினார்.

கலசப்பாக்கம் யூனியனில் உள்ள 45 ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் யூனியனுக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலசப்பாக்கம் யூனியனில் உள்ள 45 ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு 16 உபகரண பொருட்கள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசி ராஜசேகரன் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:- கலசப்பாக்கம் யூனியனில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் நமது கிராமங்கள் தூய்மையாக இருந்தால்தான் கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும். அதனால் அனைத்து கிராமங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசி ராஜசேகரன் தூய்மை பொருட்களை வழங்கி, தூய்மை பணியாளரிடம் ஊராட்சிகளை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜுலு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாசு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் நாராயணன், வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் அனைவரும் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!