/* */

கோடை விழா முன்னேற்பாட்டு பணிகள் : பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு

ஜமுனாமரத்தூரில் ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கோடை விழா முன்னேற்பாட்டு பணிகள் : பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு
X

கோடை விழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு செய்த  அமைச்சர் எ.வ.வேலு 

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூரில் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ள ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:- வருகிற 18-ந் தேதி ஜவ்வாதுமலையில் கோடை விழா நடைபெற உள்ளது. இந்த கோடை விழாவிற்கு தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். இந்த ஆண்டு கோடை விழா சிறப்பான முறையில் பிரமாண்டமாக நடைபெற வேண்டும்.

இந்தக் கோடை விழாவில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கண்காட்சிகள் அதிக அளவில் அமைக்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும் இந்த ஜவ்வாது மலையில் புதிய தொழிற்சங்கம் விரைவில் தொடங்கப்படும். அதனால் மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.

ஜவ்வாதுமலையில் ரூ.3 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகையையும், ரூ.30 லட்சத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதுபோல் பல கட்டிட திறப்பு விழாக்கள், பல நலத்திட்ட உதவிகள் வழங்கவும் உள்ளார்.

மேலும் பொதுமக்களுக்கு உணவு, பாதுகாப்பான, குடிநீா், கழிப்பறைகள், போக்குவரத்து, அரங்குகள் அமைத்தல், இளைஞா்களுக்கு விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, நலத் திட்ட உதவிகள் வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது

பின்னர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம், ஜமுனமரத்தூரில் பேருந்து நிலையத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிருந்து புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடத்தினையும், பொதுப்பணித்துறை (கட்டடம்) சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் சுற்றுலா மாளிகையையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் சரவணன், கிரி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், துணை தலைவர் மகேஸ்வரி செல்வம், ஒன்றிய செயலாளர் ப.கேசவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ், ரேணுகோபால், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Updated On: 10 July 2023 2:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கனமான பொருளை தூக்கினால் அதீத வயிற்று வலி ஏற்படுகிறதா? - ஒரு எச்சரிக்கை...
  2. லைஃப்ஸ்டைல்
    எதுக்கு நீண்ட தூரம் வாக்கிங் போறீங்க? வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் உள்ள வெள்ளி பொருட்கள் பளிச்சிட வேணுமா? - இந்த...
  4. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான மொறு மொறு ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
  5. இந்தியா
    சிக்கிமில் ஆளும் கட்சி அபார வெற்றி, அருணாச்சல பிரதேசத்தை அசால்ட்டாக...
  6. வீடியோ
    🔴LIVE : ADMKவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது! IPDS திருநாவுக்கரசு...
  7. இந்தியா
    ஜாமீன் முடிந்து டெல்லி முதல்வர் திகார் சிறையில் சரண்..!
  8. வீடியோ
    🔴LIVE : அடுத்த கட்ட நகர்வு அரசியலா? | Raghava Lawrence பரபரப்பு...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..!
  10. திருவள்ளூர்
    சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!