புதுப்பாளையம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

புதுப்பாளையம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
X

புதுப்பாளையம் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புதுப்பாளையம் ஒன்றியத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் வீரானந்தல் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணி தொடக்க விழா நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் வசந்தி வரவேற்றார். புதுபாளையம் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் அரசு கல்வித் துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், கிராம கல்விக்குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!