ஜமுனாமரத்தூரில் நாளை முதியோர் மற்றும் விதவை ஓய்வூதிய சிறப்பு முகாம்

ஜமுனாமரத்தூரில் நாளை முதியோர் மற்றும் விதவை ஓய்வூதிய சிறப்பு முகாம்
X

ஜவ்வாது மலை 

ஜமுனாமரத்தூரில் முதியோர் மற்றும் விதவைகளுக்கு ஓய்வூதிய சிறப்பு முகாம் நடைபெறும் என ஜவ்வாதுமலை வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவுப்படி ஜமுனாமரத்தூர் வட்டத்தில் வசிக்கும் தகுதியுடைய 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் விதவைகள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னி ஆகியோருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று பயனடையும் வகையில் வரும் 08.09.2021 புதன் கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தகுதியுடையோர் தங்களது ஆதார் அடையாள அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தகம் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-1, ஆகியவற்றுடன் ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு ஜவ்வாதுமலை வட்டாட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!