அரவிந்தர் வேளாண்மை கல்லூரியில் நீர் மேலாண்மை கருத்தரங்கம்

அரவிந்தர் வேளாண்மை கல்லூரியில் நீர் மேலாண்மை கருத்தரங்கம்
X

அரவிந்தர் வேளாண்மை கல்லூரியில் நீர் மேலாண்மை குறித்து கருத்தரங்கம் நடைபெற்ற போது எடுத்த படம். 

கலசப்பாக்கம் அரவிந்தர் வேளாண்மை கல்லூரியில் நீர் மேலாண்மை கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்திய அரசு நீர்வள அமைச்சகம் மத்திய நிலத்தடி நீர் வாரியத்துடன் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தென்பள்ளிபட்டு அமைந்துள்ள அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஒருநாள் நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை திட்டங்கள் மற்றும் செயற்கை நிலத்தடி நீர் செறிவூட்டு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

இவ்விழாவினை, கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கி, நவீன வேளாண்மையில் மழைநீரின் முக்கியத்துவத்தையும் மற்றும் சேமிப்பையும் எடுத்துரைத்து பேசினார். மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் பணி புரியும் கோபிநாத், மூத்த விஞ்ஞானி, சர்தார் பாஷா, முகமது ரபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிலத்தடி நீர் பாதுகாப்பு மேலாண்மை திட்டங்கள் மற்றும் செயற்கை நிலத்தடி நீர் செறிவூட்டு முறைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரியில் உள்ள மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் உதவிப்பேராசிரியர் மனோஜ் குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story