பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய சரவணன் எம்.எல்.ஏ.

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய சரவணன் எம்.எல்.ஏ.
X

மாணவர்களுக்கு மிதி வண்டிகளை வழங்கிய எம்.எல்.ஏ. சரவணன்.

கலசப்பாக்கத்தில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பள்ளி மாணவர்களுக்கு சரவணன் எம். எல். ஏ. வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள ஒன்பது உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், துணை சேர்மன் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திட்ட ஒருங்கிணைப்பாளர் வித்யா அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி எம். எல். ஏ. சரவணன் பேசும்போது

கலசப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கலசப்பாக்கம் யூனியன், லாடாவரம் யூனியன் கலசப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆதமங்கலம் புதூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆதமங்கலம் புதூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேல் சோழங்குப்பம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, கிழ்பாலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, கடலாடி அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு மொத்தம் 899 மிதிவண்டியை இன்று வழங்கியுள்ளோம்.

மேலும் மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதற்கு பல திட்டங்களும் சலுகைகளும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவதற்கு இலவச பஸ் பாஸ், உயர் கல்வி படிப்பிற்காக மாதம் தோறும் 1000 என தமிழக முதல்வர் வழங்கி வருகிறார்.

படிக்கும் மாணவர்கள் நல்ல ஊட்டச்சத்துடன் வளர வேண்டும், கல்வியில் உயர வேண்டும் என்பதற்காக வாரத்தில் ஐந்து நாள் முட்டையும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களின் வருங்கால முன்னேற்றத்திற்காக தமிழக அரசு வழங்கும் நல திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி மாணவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் , முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், நகர செயலாளர் சௌந்தரராஜன், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் , பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , ஆசிரியர்கள், கல்வி துறை அதிகாரிகள் , மாணவர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!