கலசப்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலையை சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு

கலசப்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலையை சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு
X

சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த சரவணன் எம் எல் ஏ

கலசப்பாக்கம் தொகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை சரவணன் எம் எல் ஏ ஆய்வு செய்தார்.

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள கோவிலூர் ஊராட்சியில் மூன்று லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலையை கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. சரவணன் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், இந்த ஜவ்வாது மலை பகுதியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்த போது கோவிலூர் ஊராட்சியில் உள்ள மக்கள் எங்கள் பகுதியில் புதிய சிமெண்ட் சாலை வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் மூன்று லட்சத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு இந்த சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.

பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் கூறியிருந்தோம் அதன் அடிப்படையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது அந்த சாலையை ஆய்வு செய்து சாலை தரமாக அமைக்கப்பட்டுள்ளதா மேலும் சாலை பக்கத்தில் மண் அணைத்து சாலையை ஒழுங்குபடுத்த வேண்டும். விரைவில் சாலை பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கப்படும் என சரவணன் எம்எல்ஏ கூறினார்.

ஆய்வின் போது ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி, பஞ்சாயத்து தலைவர் சாந்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,கழக நிர்வாகிகள் , பொதுப்பணித்துறை பொறியாளர்கள், உடன் இருந்தனர்.

புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியம், படிஅக்ரகாரம் ஊராட்சியில் செய்யாற்றின் குறுக்கே ரூபாய் 5. 5கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து பணிகளை சரவணன் எம்எல்ஏ ,துவக்கி வைத்தார். உடன்,புதுப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆறுமுகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!