திருவண்ணாமலை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கிவைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக செய்யாறு தொகுதியில் செய்யாறு ஒன்றியம் வடபூண்டிபட்டு, அனக்காவூர் ஒன்றியம் வீரம்பாக்கம், வெம்பாக்கம் ஒன்றியம் சோதியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்படி செய்யாறு ஒன்றியம் வடபூண்டிபட்டு கிராமத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை வகித்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா சுந்தரேசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஒ. ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு 2000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் கே. விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர்கள் அசோக், சான் பாஷா, திமுக நிர்வாகி பார்த்திபன், வேளாண் உதவி அலுவலர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. இதில் சரவணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மோட்டூர் அருணகிரிமங்கலம் ஆகிய 2 பஞ்சாயத்துகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- கலசப்பாக்கம் யூனியனில் முதற்கட்டமாக 23 பஞ்சாயத்துகளில் 9 ஆயிரம் மரக்கன்றுகள் இன்று முதல் நடப்படுகிறது.
இக்கன்றுகளை நமது யூனியனில் செயல்படும் கடலாடி நர்சரியில் 3 ஆயிரம் மரக்கன்றுகளும் காட்டாபூண்டி நர்சரியில் 3 ஆயிரம் மரக்கன்றுகளும் சனானந்தல் நர்சரியில் 3 ஆயிரம் மரக்கன்றுகளும் என 9 ஆயிரம் மரக்கன்றுகள் வேப்பம், கொங்கு, மா போன்ற 27 வகையான மரக்கன்றுகள் கொள்முதல் செய்து 100 நாள் பணியாளர்களை வைத்து நடப்படுகிறது.
மரக்கன்று நடுவது பெரிய விஷயம் அல்ல இதனை பாதுகாப்பது தான் மிகவும் அவசியம் மேலும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வையுங்கள் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் 15 வருடங்கள் கழித்து அது பலன் தரும் எந்த ஒரு பணியும் மேற்கொள்ளாததால் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கிறது. இதனை தடுக்கும் வகையில் மரக்கன்று நடும் திட்டம் நல்ல திட்டமாகும் மேலும் மீதமுள்ள 22 பஞ்சாயத்துகளுக்கு கூடிய விரைவில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் அன்பரசிராஜசேகரன் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் யூனியன் கவுன்சிலர் கலையரசிதுறை பீடிஓக்கள் பாண்டியன் கோவிந்தராஜுலு பஞ் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதே போல் துரிஞ்சாபுரம் யூனியனில் சேர்மன் தமயந்தி தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பஞ் துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், பீடிஓ லட்சுமி, இன்ஜினியர் அருணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பதுறை, பெரும்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம கூட்டுறவு வேளாண்மை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட மூலம் நடைபெற்றது.
செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் செங்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஏழுமலை , கிழக்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் , ஒன்றிய துணைச் செயலாளர்கள், வனத்துறை, அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu