கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
X
கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 3.70 லட்சம் மதிப்பில் 1250 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. அதன்படி, 3.70லட்சம் மதிப்பில் 1250 மரக்கன்றுகள் நடும் விழாவில், சி.என்.அண்ணாதுரை. எம்.பி., பெ.சு.தி.சரவணன் .எம்.எல்.ஏ., ஆகியோர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

மரக்கன்று நடும் விழாவில், கூடுதல் மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர், கலசப்பாக்கம் ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!