நெல் கொள்முதல் மையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல் போராட்டம்

நெல் கொள்முதல் மையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல் போராட்டம்
X

நெல் கொள்முதல் மையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கலசபாக்கத்தை அடுத்த மோட்டூர் பகுதியில் நெல் கொள்முதல் மையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கலசபாக்கத்தை அடுத்த மோட்டூர் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டு உள்ளது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று காலை மோட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேசி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர் அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!