மின்சாரம் பாய்ந்து இறந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம்!

மின்சாரம் பாய்ந்து இறந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம்!
X

மின்சாரம் பாய்ந்து இருந்தவர் குடும்பத்தாருக்கு நிவாரண தொகையை வழங்கிய எம்எல்ஏ சரவணன்

கலசப்பாக்கம் தொகுதியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரத்தை எம்எல்ஏ வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரத்தை சரவணன் எம்எல்ஏ வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி மேல்நாச்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த குப்பன் மனைவி சரசு. இவா் அண்மையில் மழையின்போது, அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதையறிந்த, கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ., சரவணன் அவரது கணவா் குப்பனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தனது சொந்த பணத்தில் ரூ.5 ஆயிரம் வழங்கினாா்.

இதில், புதுப்பாளையம் சேர்மன் சுந்தரபாண்டியன், வட்டாட்சியா்கள் முருகன், ரேணுகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பாணாம்பட்டு கிராமத்தில் ரூபாவதி என்பவரின் வீடு மழையில் இடிந்ததை எம்எல்ஏ சரவணன் பார்வையிட்டு அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், ரூபாவதி குடும்பத்தாருக்கு , தமிழக அரசு வழங்கும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் உடனடியாக வீடு வழங்க வேண்டும், தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் நிவாரண உதவியும் உடனடியாக வருவாய்த்துறை மூலம் வழங்க வேண்டும், மேலும் அவர்களின் குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனுக்குடன் செய்து கொடுக்க வேண்டும், மழையில் வீடு சேதம் ஆனதால் அவர்கள் தங்குவதற்கு உடனடியாக மாற்றிடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் ரூபாவதி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி தனது சொந்த நிதியில் அவர்களின் குடும்பத்திற்கு அடிப்படை தேவைகளை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர்கள், தாசில்தார் ராஜராஜேஸ்வரி, வட்டாட்சியா்கள் முருகன், ரேணுகா, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்