கலசபாக்கம் அருகே மழையால் வீடு இழந்தோருக்கு நிவாரணம்

கலசபாக்கம் அருகே மழையால் வீடு இழந்தோருக்கு நிவாரணம்
X

நிவாரண உதவிகள் வழங்கும் எம்எல்ஏ சரவணன்

கலசபாக்கம் அருகேமழையால் வீடு இழந்தோருக்கு நிவாரணஉதவிகளை சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கீழ் பொத்தரை, சிட்டம்பட்டி ஆகிய கிராமங்களில் மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்டோருக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

இவ்விரு கிராமங்களில் தொடர் மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்டோருக்கு அரசின் நிவாரண உதவியாக அரிசி , மண்ணெண்ணெய், வேட்டி சேலை ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்வில் வட்டாட்சியர் ஜெகதீசன், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் , ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!