/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்
X

தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையில் மணலூர்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள்

தொழுகை முடிந்து வெளியே வந்த அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து, கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

அதேபோல் திருவண்ணாமலையில் அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்திலும், பாலாஜி நகரிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த 3 இடங்களில் நடந்த தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

வந்தவாசி-சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு நிர்மலா நகர் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

வந்தவாசி -ஆரணி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். வந்தவாசி நகரில் உள்ள கலுங்கமரைக்காயர் வீதியில் தஹ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் தேசூர், மாலையிட்டான்குப்பம், ஒசூர், இந்திரா நகர் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

செய்யாற்றில் 440 பேருக்கு உணவுப் பொருள்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ரமலான் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சாா்பில் 440 பேருக்கு உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன.

தமுமுக செய்யாறு நகரம் சாா்பில் ரமலான் பண்டிகையொட்டி தான தா்மங்களை செய்து வருகின்றனா். அதேபோல, நிகழாண்டு செய்யாறு நகர அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாவட்டத் தலைவா் எச்.ஜமால் பங்கேற்று, முஸ்லிம்களில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு அரிசி, இறைச்சி, காய்கனிகள், மளிகைப் பொருள்கள் என தலா ரூ.400 மதிப்பிலான உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு 440 பேருக்கு வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை தமுமுக நிா்வாகிகள் செய்திருந்தனா்.

கலசபாக்கம்

கலசபாக்கம் ஒன்றியத்தில் கலசப்பாக்கம், கேட்டவரம்பாளையம், காந்தபாளையம், வீரளூர், காஞ்சி, காரப்பட்டு, மோட்டூர் உட்பட பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஈத்கா மைதானங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 12 April 2024 1:55 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...