கலசபாக்கத்தில் சூறாவளி காற்றுடன் மழை - மரங்கள், மின்கம்பம் சேதம்
கலசபாக்கம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது; இதில் சாய்ந்து விழுந்துள்ள மின் கம்பம்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட லாடவரம், கெங்கநல்லூர், கணேஷபுரம், கோவூர், சீட்டம்பட்டு, அணியாலை, காம்பட்டு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
சூறாவளி காற்றால் அப்பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பனை, தென்னை, வாழை மரங்கள் விழுந்து நாசம் அடைந்துள்ளன. விவசாய நிலத்தில் பயிர் செய்யப்பட்டிருந்த நெல், கரும்பு ஆகியவையும் காற்றில் சாய்ந்தது. மேலும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்போது 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால் மாணவர்கள் இரவு நேரத்தில் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், சேதமடைந்த மின்கம்பங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண்மைத் துறை அதிகாரிகளும் சேதம் அடைந்த பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்டராம்பட்டு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக 6 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.
தண்டராம்பட்டு மற்றும் தானிப்பாடி பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. நேற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்களும் சாய்ந்தன.
தானிப்பாடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் வயது 45 என்பவர் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளும் சே ஆண்டாள் பட்டு பகுதியில் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளும்குலைதள்ளிய நிலையில் சாய்ந்தன. சூறாவளியுடனங் மழை காரணமாக பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு மின்வினியோகத்தை ஒழுங்குபடுத்தினர்.
இதனிடையே வாைழ உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu