கண்ணமங்கலம் அரசு மேநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

கண்ணமங்கலம்  அரசு மேநிலைப்பள்ளி  மாணவ மாணவிகளுக்கு  இலவச சைக்கிள் வழங்கல்
X

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை, சரவணன்  எம்எல்ஏ வழங்கினார்

கண்ணமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை எம்எல்ஏ வழங்கினார்

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு மேநிலைப்பள்ளி, அனந்தபுரம் மேநிலைப்பள்ளி, குப்பம் மேநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தனித்தனியே நடந்த விழாவில் நேற்று 374 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்.

போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள் மனோகரன், சுரேஷ்கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர்கள் ரேணுகொண்டாபுரம் ஆனந்தன், அனந்தபுரம் சீனிவாசன், குப்பம் மகேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் படவேடு சீனிவாசன், அனந்தபுரம் வளர்மதிஅண்ணாமலை, குப்பம் துணை தலைவர் வீரமணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் சீதாராமன், போளூர் ஒன்றிய செயலாளர் ஆர் வி சேகர், படவேடு முருகன், ஜெகந்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!