அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
X

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, அமைச்சர்.

Free Bicycle - கலசபாக்கம் ஒன்றியத்தில் 9 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Free Bicycle - கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கலசபாக்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லாடவரம், மேலாரணி, ஆதமங்கலம்புதூர் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, மேல்சோழங்குப்பம், கீழ்பாலூர், கடலாடி உள்ிபட 9 அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. லாடவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவிற்கு கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். அண்ணாதுரை எம்.பி. முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே. கம்பன் கலந்துகொண்டு 115 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சீரிய முயற்சியால் திருவண்ணாமலை மாவட்டத்தை முன்மாதிரியான மாவட்டமாக வளர்ச்சி அடையும் வகையில் பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகின்றனர். லாடபுரம் பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று நபார்டு வங்கியின் மூலம் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டித் தர ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய கவுன்சிலர் பிரியங்கா, ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் செங்கம் வட்டம் காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story