/* */

திருவண்ணாமலையில் வித்தியாசமான கொள்ளையில் ஈடுபட்ட விசித்திர திருடன்

தங்க நகை, பணம், வெள்ளி பொருட்கள் இருக்க பட்டுப் புடவை மற்றும் பித்தளை பாத்திரங்கள் மட்டும் திருடிய வித்தியாசமான திருடன்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் வித்தியாசமான கொள்ளையில் ஈடுபட்ட விசித்திர திருடன்
X

திருவண்ணாமலை அருகே தங்க நகை, பணம், வெள்ளி பொருட்கள் இருக்க பட்டுப் புடவை மற்றும் பித்தளை பாத்திரங்கள் திருடப்பட்ட வித்தியாச கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர் சம்பத். தனது மனைவியுடன் வசித்து வரும் இவரும் இவரது மனைவியும் நேற்று காலை தங்களது வீட்டை பூட்டிக் கொண்டு புதுச்சேரிக்கு உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். நேற்று இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் முன்பக்க கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே சென்று வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் இருந்த துணி மணிகளை கீழே உதறி தள்ளிவிட்டு பின்னர் பூஜை அறைக்கு மேலே வைக்கப்பட்டிருந்த பித்தளை பாத்திரங்கள் மற்றும் பட்டுப் புடவைகளை அங்கிருந்து அள்ளிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தச்சம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டிற்குள் நுழைந்து பார்த்த பொழுது 20 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 60 ஆயிரம் வைத்த இடத்திலேயே இருந்துள்ளது. கொள்ளையடிக்க வந்த கொள்ளையன் பட்டுப்புடவைகள் மற்றும் பித்தளை பாத்திரங்களை மட்டும் அள்ளிச் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை ஊர் திரும்பிய சம்பத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தச்சம்பட்டு காவல் துறையினர் கொள்ளையன் குறித்து கைரேகை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளையன் கண் எதிரிலேயே 20 சவரன் தங்க சங்கிலிகள், வளையல்கள், மோதிரம் ரூபாய் 60 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவைகள் அங்கேயே இருந்த போதிலும் அவைகளை எடுத்துச் செல்லாமல் பழைய பட்டுப்புடவைகள், பித்தளை பாத்திரங்களை மட்டும் கொள்ளையடித்துச் சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 Feb 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...