பகுதிநேர கூட்டுறவு ரேசன் கடை திறப்பு

பகுதிநேர கூட்டுறவு ரேசன் கடை திறப்பு
X

அண்ணாதுரை எம்பி கலந்துகொண்டு பகுதி நேர ரேசன் கடையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் பகுதிநேர கூட்டுறவு ரேசன் கடை திறக்கப்பட்டது.

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் பகுதி நேர கூட்டுறவு ரேசன் கடை திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் அன்பரசிராஜசேகரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் தணிகைமலை வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அண்ணாதுரை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு பகுதி நேர ரேசன் கடையை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். பின்னர் 20க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மலர்கொடி பொதுவிநியோக திட்ட சார் பதிவாளர் மீனாட்சிசுந்தரம் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏழுமலை வித்யாபிரசன்னா உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அண்ணாதுரை எம்பி கலந்துகொண்டு பகுதி நேர ரேசன் கடையை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

Tags

Next Story
ai in future agriculture