அரசு பள்ளி கழிப்பறையை சீரமைக்க கோரி பெற்றோர் சாலை மறியல் போராட்டம்

அரசு பள்ளி கழிப்பறையை சீரமைக்க கோரி பெற்றோர் சாலை மறியல் போராட்டம்
X

கலசப்பாக்கம் அருகே பள்ளி கழிவறையை சீரமைக்க கோரி சாலை மறியலில் மாணவர்களின் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கலசப்பாக்கம் அருகே பராமரிப்பு இல்லாமல் உள்ள அரசு பள்ளி கழிப்பறையை சீரமைக்க கோரி பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த மேல்சோழங்குப்பத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே அரசு மேல்நிலைப்பள்ளி இயங்குகிறது. இந்தப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக கழிப்பறைகள் உள்ளன.

இந்த கழிப்பறையில் தற்போது மேல் கூரை இல்லாமல், தூய்மையாக இல்லாமல் உள்ளன. இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்தனர்.ஆனால் கழிப்பறை இதுவரை சீரமைக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஊராட்சி மன்றம் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த கடலாடி போலீசார் , பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆகியோர் கழிப்பறையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Tags

Next Story