Begin typing your search above and press return to search.
அரசு பள்ளிகளில் குடிநீர் சுகாதார வசதிகள்: ஒன்றிய குழுத்தலைவர் ஆய்வு
கலசப்பாக்கம் அருகே அரசு பள்ளிகளில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து ஓன்றிய குழுத்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்
HIGHLIGHTS

கோப்புப் படம்
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் வரும் 1ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் அதன்படி கலசப்பாக்கம் அருகே பூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ஆய்வு செய்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் ஆழ்துளை கிணறு கழிவறைகள், சுற்றுச்சுவர், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு ஒன்றிய குழுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.