ஊராட்சி மன்ற தலைவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்

ஊராட்சி மன்ற தலைவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்
X

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ஊராட்சி மன்ற தலைவர்கள்

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து, தங்கள் கிராமங்களுக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் திட்டங்களான பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்யும் முறை மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மேற்கொள்ளும் பணிகளின் முழு அதிகாரத்தை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்க வேண்டும்.

ஆடு, மாடு கொட்டகை வழங்கும் திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. தங்கள் கிராமங்களுக்கு ஒதுக்கப்படும் திட்டங்கள் பஞ்சாயத்து தலைவர்களுக்கு முறையாக தெரியப்படுத்துவது இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி அலுவலர்களிடம் வழங்கி விட்டு அங்கிருந்து திரும்பினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்