துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய நுழைவு வாயில் திறப்பு

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய நுழைவு வாயில் திறப்பு
X

ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலை திறந்து வைத்த துணை சபாநாயகர்

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய நுழைவு வாயிலை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதியநுழைவு வாயில் திறந்து வைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதிராமஜெயம் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் , ஒன்றிய செயலாளர்கள் ராமஜெயம், அண்ணாமலை ஆகியோர் முன்னில வகித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, புதிய நுழைவாயிலை திறந்து வைத்து புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பேசியதாவது:-

இந்த புதிய நுழைவாயில் திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் உள்ளது போல் இந்த நுழைவாயிலும் உள்ளது கலைநயத்தோடு நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார். அதை மக்கள் பயன்பாட்டிற்கு இப்போது தொடங்கி வைத்து உள்ளோம் . இதன் மூலம் இங்கு அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் அரசு அலுவலர்களும் மக்கள் பணிகளை சிறப்பாக செயல்படுத்த வேண்டும், மக்கள் அனைவருக்கும் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் கடைகோடி மக்களுக்கும் அரசு திட்டங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும். அதற்கு மக்கள் பிரதிநிதியாக நீங்களும் நாங்களும் அரசு அலுவலர்களும் முழுமையாக செயல்பட வேண்டும் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, இவ்வாறு பேசினார்.

தென் மகாதேவ மங்கலத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் அமைப்பதற்கு பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி தென் மகாதேவ மங்கலத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் அமைப்பதற்கு ரூபாய் 30 லட்சத்தில் பூமி பூஜை செய்து பணிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தொடங்கி வைத்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசுகையில்

நான் இந்த பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய வந்தபோது என்னிடம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் எங்கள் ஊராட்சிக்கு ஏற்கனவே உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் பழுதாகி உள்ளது . அதனால் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் அமைப்பதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சத்தில் இப்பொழுது பூமி பூஜை செய்து பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது .இப்பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சரவணன் எம்எல்ஏ பேசினார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றிய குழு கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார் ,ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், அரசு ஒப்பந்தக்காரர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !