திருவண்ணாமலை பகுதியில் புதிய பேருந்து நிழற்கூடம் திறப்பு
பயணியர் நிழற் கூடத்தை திறந்து வைத்த அமைச்சர் , உடன் சட்டப்பேரவை துணை சபாநாயகர் , மற்றும் ஆட்சியர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, திருவண்ணாமலை சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சத்தில் பயணியா் நிழற்கூடம் கட்டப்பட்டது.
விழாவுக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் முருகேஷ், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாநில கைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவா் ஸ்ரீதரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங், அண்ணாதுரை எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயணியா் நிழற்கூடத்தை திறந்துவைத்தாா்.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் திருவண்ணாமலை மேல்புத்தியந்தல் பகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்கூடத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பேருந்து பயணியர் நிழலகத்தினை பொது மக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சா் எ.வ.வேலு, திறந்து வைத்தார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறன் கொண்ட 24 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 92 ஆயிரத்து 400 மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் தமிழக நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் பழனிவேல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தங்கமணி, மாவட்ட மக்கள் நண்பா்கள் குழுவின் தலைவா் ஆறுமுகம், வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சரவணன், வேங்கிக்கால் ஊராட்சித் தலைவா் சாந்தி தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu