ஜவ்வாது மலையில் நியாய விலை கடை திறப்பு

ஜவ்வாது மலையில் நியாய விலை கடை திறப்பு
X

நியாய விலை கடை திறந்து வைத்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கிய சரவணன் எம்எல்ஏ

ஜவ்வாது மலையில் நியாய விலை கடையை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் குட்டகரை ஊராட்சி பெரியவள்ளி கிராமத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ சரவணன் திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் குட்டகரை ஊராட்சி பெரியவள்ளி கிராமத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ சரவணன் திறந்து வைத்தார். ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரி செல்வம், தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கேசவன், முன்னில வகித்தனர். வட்ட வழங்கிய அலுவலர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சரவணன் எம்எல்ஏ புதிய பகுதி நேர ரேஷன் கடை திறந்து வைத்து பேசியதாவது;

ஜவ்வாது மலைவாழ் மக்களின் கோரிக்கை ஏற்று தற்போது புதிய பகுதி நேர ரேஷன் கடை அமைத்துக் கொடுக்க ப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் வெகுதூரம் சென்று ரேசன் பொருட்கள் வாங்கும் நிலை மாறி தற்போது அருகமையில் ரேசன் பொருட்களை வாங்கி பயன்பெறலாம் எனவும், மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இன்னும் பல்வேறு நல திட்ட உதவிகளும் வளர்ச்சி பணிகளும் செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநதி ஸ்டாலினும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும், நானும் உங்களுக்காக செய்வதற்காக தயாராக உள்ளோம் .

அதேபோல் மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இப்பகுதியில் தொழிற்பயிற்சி மையம் ஜவ்வாது மலையை சுற்றுலா தளம் ஜவ்வாது மலையில் சுற்று லா மாளிகை என ஏராளமான திட்டங்களும் சலுகைகளும் அதேபோல் கோடை விழாவில் ஏராளமான மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் உதவிகளும் சான்றிதழ்களும் ஜாதி சான்றிதழ்களும் அமைச்சர்களும் நானும் வழங்கினோம்.

இத்தனை திட்டங்களும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக செய்துள்ளோம் என்று கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ சரவணன் தெரிவித்தார்,

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி செல்வம், ஒன்றிய செயலாளர் கேசவன் ,வட்ட வழங்கல் அதிகாரிகள் ,நியாய விலை கடை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் ,திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா: நாமக்கலில் சிறப்பு கருத்தரங்கம்