அதிவேகத்தில் வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஒருவர் உயிரிழப்பு

அதிவேகத்தில் வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததால்  ஒருவர் உயிரிழப்பு
X
அதிவேகத்தில் வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதிவேகத்தில் வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் காயமடைந்தனா்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த குருவிமலை அருகே அதிவேகத்தில் வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஆறு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் ஒருவர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி அருணாச்சலம் தெருவைச் சோ்ந்தவா் தேவராஜ் . இவா், தனது மனைவி பூரணி , மகன் பிரபாகரன், மருமகள் சீதா , பேரன்கள் கதிா் , சா்வேஸ் , சீதாவின் தாய் மலா் ஆகியோருடன் திருப்பதி, வேலூா் தங்க கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். காரை பிரபாகரன் ஓட்டி வந்தாா்.

இவா்களது காா் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த குருவிமலை ஊராட்சியில் போளூா் - திருவண்ணாமலை சாலையில் திங்கள்கிழமை வந்தபோது, திடீரென சாலையோரப் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பூரணி, தேவராஜ் உள்பட 7 பேரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு, போளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

அதில் தேவராஜ் மனைவி பூரணியை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்

மற்றவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், கலசப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story