விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்திற்கு விவசாயிகள் வராததால் அதிகாரிகள் ஏமாற்றம்
அதிகாரிகளை கண்டித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள்
கலசபாக்கத்தில் விவசாய குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் உள்ளே வராததால் அதிகாரிகள் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர். அதில் விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலகம் முன்பு வெளியே அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென் பள்ளிப்பட்டு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம்மைய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து முகப்பு வாயில் அமர்ந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். நேற்று கலசபாக்கம் வேளாண் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற இருந்த நிலையில், வேளாண் அலுவலகத்தில் போதிய இடவ சதி , போக்குவரத்து வசதி இல்லாததால் குறைதீர்வு கூட்ட இடத்தை தாலுக்கா அலுவலகத்தில் வைக்குமாறு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்காததால் சென்ற மாதம் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.
அதற்கு மாவட்ட ஆட்சியர் அடுத்த மாதம் தாலுக்கா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் வழக்கம்போல் வேளாண்மை துறை அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடைபெற அறிவிப்பு வந்தது. அந்த அறிவிப்பில் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெறும் என்று கூறிவிட்டு வேளாண்மை துறை அலுவலகத்தில் நடைபெறும் என்று வழங்கப்பட்டது. இதனை கண்டித்து விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் வெங்கடேசன், நாகராஜ், சிவராமன், சங்கர், முருகன், ஐயப்பன் உட்பட அனைவரும் உள்ளே செல்லாமல் வேளாண்மை அலுவலகம் முகப்பு வாயிலில் அமர்ந்து கோஷம் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் செய்து வெளிநடப்பு செய்தனர். இதனால் குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் மட்டுமே அமர்ந்திருந்தனர்.
விவசாயிகள் உள்ளே வராததால் செய்வதறியாது அதிகாரிகள் காத்திருந்தனர். இருப்பினும் நீண்ட நேரமாக முழக்கங்களை எழுப்பி விவசாயிகள் உள்ளே செல்லாமல் புறக்கணித்தனர். இதனால் கலசபாக்கத்தில் விவசாய குறைதீர்வு கூட்டம் நடைபெறவில்லை.
இதனால் விவசாய குறைதீர்வு கூட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, மற்றும் தாசில்தார் ராஜராஜேஸ்வரி, துறை சார்ந்த அதிகாரிகள் அமர்ந்திருந்து விட்டு சென்றனர்.
ஆரணி
ஆரணியில் விவசாயிகள் கூட்டம் இடம் மாற்றக்கோரி விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் அமைந்துள்ள வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம், மேலும் வேளாண்மைக்குறை அலுவலகத்தில் வட்டாட்சியர் கௌரி தலைமையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் .அப்போது விவசாயிகள் அமர்வதற்கு போதுமான இட வசதி இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் கூட்ட அரங்கிற்கு வெளியே நின்று கொண்டு இருந்தனர்.
விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்திற்கு வரும்போது விவசாயிகளுக்கு அமர்வதற்கு போதிய இட வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் எங்களுக்கு போதுமான இட வசதி செய்து தரும் வரையில் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்றும் விவசாயிகள் அளிக்கும் புகார்களுக்கு வேளாண் அதிகாரிகள் செவிசாய்க்காமல் அலைக்கழிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu