ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை பணிகள் துவக்கம்..!

ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை பணிகள் துவக்கம்..!
X

சாலை பணிகளை துவக்கி வைத்த அண்ணாதுரை எம்பி

கலசப்பாக்கத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை பணிகளை எம்பி மற்றும் எம்எல்ஏ துவக்கி வைத்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பத்தியவாடி முதல் ஆணைவாடி வரையும், பத்தியவாடி முதல் அணியாளை வரையும், வீரளூர் முதல் மேல்சோழங்குப்பம் வரையும், வீரளூர் முதல் பட்டியந்தல் வரையும் 5 புதிய சாலைகள் ரூ 10.58 கோடி மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை , கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் , பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் சரவணன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, புதிய சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசியதாவது, பத்தியவாடி முதல் ஆணைவாடி வரையும், தென்பள்ளிப்பட்டு கரியம்பாடி வழியாக பத்தியவாடி பெரிய காலூர் ஆணைவாடி வரை புதிய சாலை ரூ 2.33 கோடி மதிப்பீட்டிலும், பத்தியவாடி முதல் அணியாளை காம்பட்டு வரையும், ரூ 2.40 கோடி மதிப்பீட்டில் புதிய சாலையும், வீரளூர் முதல் மேல்சோழங்குப்பம் வரையும், ரூ 2.37 கோடி மதிப்பீட்டில் புதிய சாலையும், வீரளூர் முதல் மேல்சோழங்குப்பம் வரையும், ரூ 1.47 கோடி ம தி ப் பீட்டி ல் பு தி ய சாலையும், வீரளூர் முதல் பட்டியந்தல் வரையும், ரூ 2.7 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் மற்றும் சாலையில் அமைக்கப்படுகிறது. மொத்தம் 5 புதிய சாலைகள் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 10.58 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் .

இதுபோல் எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவும் கலசப்பாக்கம் தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவதற்கு முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.

அதுவும் குறிப்பாக கலசபாக்கம் தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாக இருந்ததால் அந்த தொகுதியை வளர்ச்சியான தொகுதியாக மாற்றுவதற்கு முதலமைச்சர் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நானும் தொடர்ந்து வளர்ச்சி பணியை செய்து கலசபாக்கம் தொகுதியை வளர்ச்சியான தொகுதியாக மாற்றி வருகிறோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கூறினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை, மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் , ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம், ஒன்றிய துணை செயலாளர் குப்பன், இஞ்சினியர் தனவந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் , ஊராட்சி மன்றதலைவர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பச்சையப்பன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்