மங்களம் ஊராட்சியில் புதிய திருமண மண்டபம்

மங்களம் ஊராட்சியில் புதிய திருமண மண்டபம்
X

புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கு நடைபெற்ற பூமி பூஜையில் துணை சபாநாயகர்

மங்கலம் ஊராட்சியில் புதிய திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள மங்களம் ஊராட்சியில் ரூபாய் 3.20 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் தலைமை தாங்கினார்.

மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி புதிய திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பேசியதாவது,

மங்கலம் ஊராட்சியில் தொடர்ந்து பல கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய திட்டங்களை அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ,மற்றும் நானும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், கோரிக்கை வைத்ததின் பேரில் மங்களம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ போர் மன் னலிங்கேஸ்வரர் கோயிலுக்கு ரூபாய் 50 லட்சத்தில் புதிய தேர் அமைத்தல். மங்கலம் ஊராட்சியில் புதிய திருமண மண்டபம் ரூபாய் 3.20 கோடி மதிப்பீட்டில் அமைக்க இப்போது நமது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

அதற்கான பூமி பூஜை விழா தற்போது நடைபெற்றுள்ளது. இதுபோன்று பல திட்டங்கள் மங்களம் ஊராட்சிக்கு வழங்கப்பட இருக்கிறது . சென்ற இரண்டு தினங்களுக்கு முன்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 1.56 கோடி மதிப்பீட்டில் நபார்டு வங்கி கடன் உதவி திட்டத்தின் மூலம் இரண்டு அடுக்குமாடி பள்ளி கட்டிடம் அமைப்பதற்கு பூமி பூஜை தொடங்கி வைக்கப்பட்டது. இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் மங்களம் ஊராட்சிக்கு செய்யப்பட்டு வருகிறது.

எந்த ஒரு நலத்திட்ட உதவியாக இருந்தாலும் மங்களத்தில் ஆரம்பித்தால் மங்களகரமாக நடைபெறும் என்பது ஐதீகமாக நிகழ்ந்து வருகிறது. அதன்படி இந்த மங்களம் ஊராட்சிக்கு பல நல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர்களால் தீர்க்க முடியாத கோரிக்கைகளை என்னிடம் கொடுங்கள் உங்களுக்காக நான் செய்து கொடுக்கிறேன் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டிருந்தார். அப்போது ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தீர்க்க முடியாத கோரிக்கைகளை பெற்று ஒவ்வொரு கோரிக்கையாக தற்போது நிறைவேற்றிக் கொண்டு வருகிறார், மேலும் மங்களம் பஞ்சாயத்துக்கு என வைக்கப்பட்ட கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். மேலும் பெண்களுக்காக பல நலத்திட்ட உதவிகள் முதல்வர் வழங்கி வருகிறார். இந்த மங்களம் ஊராட்சி அனைத்து வளர்ச்சி பணிகளிலும் பேரூராட்சியாக மாறி வருகிறது. இதற்கு முழு காரணம் திமுக அரசு தான் என சட்டப்பேரவை துறை சபாநாயகர் பிச்சாண்டி பேசினார்.

நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள், ஆய்வாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare products