அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் பயிற்சி மைய கட்டிடம் : பூமி பூஜை..!

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் பயிற்சி மைய கட்டிடம் : பூமி பூஜை..!
X

பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்த சரவணன் எம் எல் ஏ

புதுப்பாளையத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய தொழில் பயிற்சி மையம் கட்டிட பணிகளை எம் எல் ஏ தொடங்கி வைத்தார்

புதுப்பாளையம் நாகப்பாடி பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ. 4.80 கோடியில் தொழில்பயிற்சி மைய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாகப்பாடி பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது.

இந்தக் கல்லூரியில் மாணவா்கள் பயன்பாட்டுக்காக தமிழக அரசு மூலம் கல்லூரி வளாகத்தில் ரூ.4 கோடியே 80 லட்சத்தில் தொழில்பயிற்சி மைய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் மனோகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வா் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ., சரவணன் பூமி பூஜையில் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கிவைத்துப் பேசியதாவது,.

இந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய நான்கு வகுப்பறை கட்டிடம் மற்றும் ஆய்வுக்கூடம் போன்ற பல்வேறு கட்டிடங்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,வழங்கி தொடங்கி வைத்துள்ளார்கள், அதன் மூலம் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக மாணவ ர்க ளு ம் ஆசிரியர்களும் இந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு தொழில்பயிற்சி மையம் வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையின் அடிப்படையில் நான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடமும், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனிடமும், தொடர்ந்து கோரிக்கைவைத்து வந்தேன் அந்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ 4.80 கோடி மதிப்பீட்டில் புதிய திறன் வளர்ப்பு தொழில் பயிற்சி மையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதை இப்பொழுது பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என எம்எல்ஏ பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் பவ்யா ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மனோகரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சுப்பிரமணி (நாகப்பாடி), ஜெயந்தி சீனு (காரப்பட்டு), முன்னாள் தலைவா் இளங்கோவன், அரசு ஒப்பந்ததாரா் சங்கா் , உள்ளிட்ட கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!