துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உயர் கோபுரம் மின்விளக்கு திறந்து வைத்த எம்பி

உயர் கோபுர மின் விளக்கை எம்பி திறந்து வைத்த அண்ணாதுரை, எம்பி
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள நாயுடு மங்கலத்தில் உயர் கோபுர மின் விளக்கை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பாரதி ராமஜெயம் தலைமை தாங்கினார் .ஒன்றிய செயலாளர் ராமஜெயம், அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வினோத் குமார் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்து கொண்டு உயர் கோபுர மின் விளக்கை திறந்து வைத்து பேசியதாவது,
இதுவரை உங்கள் தொகுதியில் பல ஊராட்சிகளுக்கு உயிர் கோபுரம் மின் விளக்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாயுடு மங்கலம் மக்கள் இங்கு உள்ள கூட்டு சாலையில் ஒரு மின் உயர் கோபுரம் வேண்டும் என கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 4 லட்சம் செலவில் இந்த உயர் கோபுர மின் அமைக்கப்பட்டது.
இதன் மூலம் இப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் நெடுஞ்சாலைக்கு செல்வதற்கு இந்த உயர் கோபுரம் மின்விளக்கு மூலம் பாதுகாப்பான முறையில் செல்லலாம். இந்த மின்விளக்கின் மூலம் இப்பகுதியில் எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என அண்ணாதுரை எம்பி பேசினார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பாலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி ,வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, மின்வாரிய பொறியாளர் அருணா, மாணவரணி அமைப்பாளர் குமரேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மின்வாரிய அலுவலர்கள், அரசு அலுவலர்கள், ஒன்றிய உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் தேவனாம்பட்டு, நார்த்தாம்பூண்டி, மேப்பத்துரை, சாலையனூர், நாயுடுமங்களம், உள்ளிட்ட பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ரூபாய் 1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் தொகுப்பினை , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu