ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் ரூ40 கோடியில் பல்வேறு திட்ட பணிகள் துவக்க விழா

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில்  ரூ40 கோடியில் பல்வேறு திட்ட பணிகள் துவக்க விழா
X

 ஜவ்வாதுமலை யூனியனில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை சிறப்புரையாற்றினார்

கலசப்பாக்கம் தொகுதி ஜவ்வாது மலைப்பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது

கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூடுதல் ஆட்சியர் பிரதாப் தலைமை வகித்தார். கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தி.சரவணன், முன்னிலை வகித்து பேசினார். ஒன்றிய தலைவர் ஜீவா வரவேற்றார்

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசுகையில், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் வருடம் ஒன்றுக்கு ஏதேனும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து அந்த கிராமத்தை அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து மேம்படுத்தப்படும் . இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு கலசபாக்கம் தொகுதியில் உள்ள காந்தபாளையம் கிராமத்தை தேர்வு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு ஜவ்வாதுமலையிலுள்ள கோவிலூர் ஊராட்சியை தேர்வு செய்யப்பட்டு, ஊராட்சியில் அடிப்படைத் தேவைகளான ஐந்து பணிகளை முதலில் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்க இன்று பணி உத்தரவு வழங்கப்படுகிறது.

மேலும் ஜவ்வாது மலை பேருந்து நிலையம் கட்டுவதற்கு எனது நிதியிலிருந்து ரூ.15 லட்சமும் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சமும் ஒதுக்கீடு செய்து பல சிறப்பு அம்சங்களுடன் கூடியதாக பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.

மேலும் ஜவ்வாது மலையில் அரசின் நேரடி திட்டங்களாக கடந்த ஆண்டு ரூ.17 கோடியில் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு நெடுஞ்சாலைத் துறை வனத்துறை சுற்றுலாத் துறை பொதுப்பணித் துறை அற நிலையத் துறை ஆகிய துறைகளிலிருந்து ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil