ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் குறித்து ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்
விழா நடைபெற உள்ள இடங்களை ஆய்வு செய்த எ.வ.வே. கம்பன் மற்றும் சரவணன் எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேடு பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகின்ற எட்டாம் தேதி அன்று நடைபெற உள்ளது. அன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்கள்.
இந்நிலையில் அதன் முன்னேற்பாடு பணிகளையும் அமைச்சர் வரும் பொழுது வரவேற்பு நிகழ்ச்சிகளையும் , மாநில தடகள சங்கத் துணைத் தலைவரும், மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வேகம்பன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்பொழுது மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், பேசியதாவது
இந்த படவேடு பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடமும் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவிடமும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடவும் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியிடமும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கோரிக்கை வைத்தார்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற ஆண்டு வழங்கப்பட்டது. அந்த ஆரம்ப சுகாதார நிலையம் கலசபாக்கம் தொகுதி படவேடு பகுதிக்கு வழங்க வேண்டும் என்று முதலமைச்சரிடமும் அமைச்சர்களிடமும் நானும் சட்டமன்ற உறுப்பினரும் கோரிக்கை வைத்தோம். அந்தக் கோரிக்கையின் அடிப்படையில் முதலமைச்சரும், அமைச்சரும் சிறிதளவும் யோசிக்காமல் கலசப்பாக்கம் தொகுதி கடந்த 20 ஆண்டு காலமாக எந்த ஒரு வளர்ச்சி பணியும் சரி யான முறையில் நடைபெறவில்லை, மக்களுக்கு கிடைக்கவும் இல்லை, அதனால் கலசப்பாக்கம் தொகுதியை வளர்ச்சியான தொகுதியாக மாற்றுவதற்காக கலசபாக்கம் தொகுதிக்கு வழங்கலாம் என்று கூறினர். அதன் மூலம் இந்த புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை படவேடு பகுதி மக்களுக்காக இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழங்கப்பட்டது. அதன் பணிகளும் இப்போது நிறைவு பெற்றது.
வரும் 8ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி, திறந்து வைக்க வருகிறார். அதனால் கழக நிர்வாகிகள் அனைவரும் அமைச்சரை சிறப்பான முறையில் வரவேற்க வேண்டும், அதேபோல் முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தரமாகவும் இருக்கவேண்டும் அதேபோல் துறை சார்ந்த அதிகாரிகளும் அரசு அலுவலர்களும் சிறப்பான முறையில் செயல்பட்டு அரசு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பேசினார். தொடர்ந்து விழா நடைபெறும் இடம் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து எ.வ.வே.கம்பன், ஆய்வு செய்தார். ஆய்வு செய்தார்
மேலும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைக்க வருகை தரும் அமைச்சருக்கு முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக அமைக்கவேண்டும் என்பதற்காக முன்னேற்பேடு பணிகளை மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர் சரவணன், ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், , ஒன்றிய செயலாளர் சேகர், உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு, மற்றும் அரசு அலுவலர்கள் , உள்ளாட்சிப் பிரதிநிதிகள் , உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu