ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம், எம்எல்ஏ ஆய்வு!

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம், எம்எல்ஏ ஆய்வு!
X

காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த சரவணன் எம்எல்ஏ

கலசப்பாக்கம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை எம்எல்ஏ ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தென்னகரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, கலசப்பாக்கம் எம்எல்ஏ , சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது

தமிழக அரசு அறிவித்த காலை சிற்றுண்டி திட்டத்தை மாணவர்களுக்கு சரியான முறையில் கிடைக்கிறதா?

மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளும் தரமாக இருக்கிறதா என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ஆய்வு செய்ய அனைத்து அமைச்சர்களுக்கும், அனைத்து நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, அவர்கள் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்து அதேபோல் அனைத்து தொகுதிகளிலும் காலை சிற்றுண்டி திட்டத்தை குழந்தைகளுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா, அதுவும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இருக்கிறதா அனைத்து சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் மூன்று தினங்களுக்கு முன்பு அருணகிரி மங்கலத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தோம். அதேபோல் இப்போதும் இங்கேயும் ஆய்வு செய்து வருகிறோம். இந்த காலை சிற்றுண்டி திட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆய்வின்போது இன்னும் விரைந்து செய்து குழந்தைகளுக்கு உணவு வழங்க வேண்டும், காலை உணவு மொத்தம் எத்தனை வகை செய்து வழங்குகிறீர்கள் என்று எம்எல்ஏ சரவணன் கேட்டு அறிந்தார்.

மேலும் சரியான நேரத்திலும் சுவையாகவும் உணவுகள் இருக்கிறதா என்பதை மாணவர்களிடம் கேட்டு அறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி ,வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன், ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!