கலசபாக்கம் அரசு தாெடக்கப் பள்ளியில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

கலசபாக்கம் அரசு தாெடக்கப் பள்ளியில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
X

பாடம் கற்பிப்பதை சட்டமன்ற உறுப்பினர், சரவணன் மாணவர்களுடன் அமர்ந்து கேட்டறிந்தார்.

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பாடம் கற்பிப்பதை மாணவர்களுடன் தரையில் அமர்ந்து கவனித்த எம்எல்ஏ சரவணன்.

கலசப்பாக்கம் பகுதியில் உள்ள விண்ணுவாம்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் மற்றும் என்னும் எழுத்தும் திட்டத்தில் கல்வி கற்பதில் மாணவர்களின் திறன்களை குறித்தும் மற்றும் மதிய உணவு வழங்குதல் ஆகியவை குறித்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தி.சரவணன் திடீர் என்று சென்று மாணவர்களுடன் தரையில் அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில் எனது தொகுதிக்குட்பட்ட தொடக்கப்பள்ளிகளில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டடிருந்தன, இருப்பினும் தற்போது கொரோனா குறைந்து பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 வருடங்களாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில் அவர்களின் கற்றல் திறன் குறைந்திருக்கலாம் என கருதி எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இதற்காக 1 முதல் 3 வகுப்பு வரை செல்லும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட்டு இதன் மூலம் 1 வகுப்பு முதல் 3 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் அரும்பு மொட்டு மலர் என 3 வகையாக மாணவர்களின் கல்வித்தரத்தை பிரித்து அதற்கேற்றவாறு எண்ணும் எழுத்தும் திட்டத்தில் முழுமை பெற செய்வதே இந்த திட்டமாகும். இந்த திட்டம் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் எப்படி உள்ளது என்பதற்காகவே நான் நேரில் சென்று ஆய்வு செய்தேன் அப்போது இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் முதல் மாணவர்கள் வரை கற்றல் கற்பித்தல் திறனில் நல்ல முறையில் கற்பித்து வருகின்றனர். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசிராஜசேகரன் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமை ஆசிரியர் அன்னபூரணி உதவி ஆசிரியர் சந்தியா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story