மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
X

பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் மற்றும் அதிகாரிகள்

கலசப்பாக்கம் அருகே நடைபெற்ற மனுநீதி முகாமில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை எம்எல்ஏ வழங்கினார்

கலசபாக்கம் தாலுகாக்குட்பட்ட கிடாம்பாளையம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குமரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார் சிறப்பு விருந்தினராக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்துகொண்டு 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, தமிழக அரசின் சிறப்பு திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களுடைய கிராமத்திலேயே அரசு அதிகாரிகளை வைத்து நல திட்டங்கள் வழங்கப்படுகிறது. அரசு கொடுக்கும் வீட்டு மனைகளை உடனடியாக பட்டா மாறுதல் செய்து கொள்ள வேண்டும் என்றும் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பேசினார்

அரசு துறை அதிகாரிகள் தங்களுடைய பல்வேறு அரசுத்துறை திட்டங்கள் குறித்து விரிவாக பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்கள்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, தனி வட்டாட்சியர் மலர்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!