கலசப்பாக்கம் பகுதியில் வகுப்பறை கட்டுமானப் பணி எம்எல்ஏ ஆய்வு

கலசப்பாக்கம் பகுதியில் வகுப்பறை கட்டுமானப் பணி எம்எல்ஏ ஆய்வு
X

பள்ளி புதிய கட்டிடத்தை திறந்து வைத்த சரவணன் எம்எல்ஏ

கலசப்பாக்கம் பகுதியில் வகுப்பறை கட்டுமான பணி மற்றும் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் கலசப்பாக்கம் எம்எல்ஏ கலந்துகொண்டார்.

கலசப்பாக்கம் பகுதியில் வகுப்பறை கட்டுமான பணி மற்றும் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்துகொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காஞ்சி ஊராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நபார்டு வங்கி கடன் உதவி திட்டத்தின் மூலம் ரூ 2.13 கோடி மதிப்பீட்டில் 10 வகுப்பறை கட்டுமான பணியை சரவணன் எம்எல்ஏ ஆய்வு செய்து பேசியதாவது:

பள்ளி கட்டுமான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் மேலும் சென்ற ஆண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு வந்து போது மாணவர்களுக்கு போதுமான கட்டிட பணி வசதிகள் இல்லை என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு 10 வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டிடம் கட்டுமான பணி தொடங்குவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலமாகவும் பொது பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மூலமாகவும் இந்த பள்ளிக் கட்டிடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டது. அதன் மூலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது .

அதே போல் இந்த பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பள்ளிக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை தேவை என்றாலும் என்னுடன் தாராளமாக கேளுங்கள் செய்து கொடுப்பதற்கு தயாராக உள்ளேன் மேலும் மாணவர்கள் நீங்கள் நல்ல முறையில் படித்து பெரிய அளவில் சாதிக்க வேண்டும் அதற்கு ஆசிரியர்கள் நீங்கள் முழு அளவு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் சென்ற ஆண்டு விட இந்த ஆண்டு தேர்ச்சியில் 100% மதிப்பெண்பெறவேண்டும் என்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுரை கூறினார். பள்ளி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சரவணன் எம்எல்ஏ கூறினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர் கி.ஆறுமுகம், பஞ்சாயத்து தலைவர்கள் ஜெயந்தி லட்சுமணன் (எ) சீனு, சுந்தரம், இன்ஜினியர் அருள், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள்திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

புதிய கட்டிடம் திறப்பு விழா, எம்எல்ஏ பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஆண்டனீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

கலசப்பாக்கம் எம்.எல்.ஏ, சரவணன், புதுப்பாளையம் யூனியன் சேர்மன் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், பள்ளியின் நிறுவனர் மரியா ராயப்பன், பள்ளியின் தாளாளர் லூர்துசாமி, முதல்வர் ஜோஸ்பின் சூரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story