கலசப்பாக்கத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் கண்காட்சியினை பார்வையிட்ட கலசப்பாக்கம் எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் ஒன்றியம் மேல் சோழங்குப்பம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கி பேசினார்.
மேலும் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சிறப்பு கண்காட்சியினை துவக்கி வைத்து பார்வையிட்டார்
ஆடி கிருத்திகை திருவிழா ஆய்வு கூட்டம்
கலசபாக்கத்தை அடுத்த எலத்தூர் மோட்டூர் கிராமத்தில் உள்ள மலை மீது வள்ளி தேவசேன சமேத சுயம்பு நட்சத்திர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இவ்விழாவில் சுற்றுவட்டத்தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா வருகிற 9ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தலைமையில் நடைபெற்றது..
கூட்டத்தில் ஆடி கிருத்திகை விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மலையை சுற்றி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு சாலையை அகலப்படுத்தி சுத்தம் செய்து தர வேண்டும்.
அன்னதானம் செய்யும் பக்தர்கள் இந்து சமய அறநிலைத்துறையிடம் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டும். ஆடிக் கிருத்திகை விழாவில் கோவில் அருகில் அரசியல் கட்சி சார்ந்த பேனர்களை வைக்க தடை விதிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
மேலும் திருவண்ணாமலை, போளூர் பகுதியில் இருந்து கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். போளூரில் இருந்து செங்கம் செல்லும் சாலையில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதும், மலை மீது ஏறி செல்லும் பக்தர்களுக்கு வழியில் மருத்துவ முகாம் குறித்தும் ஆலோசனைகள் செய்யப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியன், தாசில்தார் ராஜராஜேஸ்வரி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை, தீயணைப்பு மற்றும் போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu