புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்த எம்எல்ஏ

புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்த எம்எல்ஏ
X

புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்த  சரவணன், சரவணன் எம்எல்ஏ  

புதுப்பாளையம் ஒன்றியத்தில் புதிய மின்மாற்றியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அமர்நாத்புதூர், கொட்டகுளம் ஆகிய இரண்டு இடங்களில் 100 கிலோ வாட் கொண்ட புதிய மின்மாற்றியை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அமர்நாத்புதூர், கொட்டகுளம் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் 100 கிலோ வாட் கொண்ட புதிய மின்மாற்றியை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் மனோகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்வாரிய செயற்பொறியாளர் சங்கராகாரன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், 100 கிலோ வாட் கொண்ட புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்து பேசியதாவது:

புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அமர்நாத்புதூர் மற்றும் கொட்டகுளம் பகுதி மக்கள் நான் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்த போது அப்பொழுது என்னிடம் எங்கள் பகுதியில் மின்சாரம் துண்டித்து வருகிறது அதனால் எங்கள் பகுதியில் புதிய மின் மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்ப டை யி ல் அமர்நாத்புதூர் மற்றும் கொட்டகுளம் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் தல 100 கிலோவாட் கொண்ட புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்துள்ளோம்.

இதன் மூலம் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் சீரான முறையில் வழங்கப்படும். அதேபோல் விவசாயம் செய்வதற்கும் உதிரப்பணிகள் செய்வதற்கும் மின்சாரம் துண்டிக்கப்படாமல் வழங்கப்படும். அதனால் பொதுமக்கள் நீங்கள் கவலைப்ப டா ம ல் மி ன்சா ர த்தை பயன்படுத்தலாம் என்று சரவணன் எம்எல்ஏ பேசினார்.

நிகழ்ச்சியில் மின்வாரிய உதவி செயற்பொறியளர் மூர்த்தி, மின்வாரிய உதவி பொறியாளர்கள் சுரேஷ், சிவசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம், பூங்காவனம் ஜெயராஜ், திருமலை, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கழக நிர்வாகிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!