அமைச்சர் சேகர்பாபுவிற்கு அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்
கலசபாக்கம் அருகே அன்னதான மண்டபத்தை திறத்து வைத்த அமைச்சர்கள்
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம் இந்து சமய அறநிலை துறை சார்பில் திருக்கோயில்களின் வளர்ச்சிப் பணிகள், சாலை மேம்பாடு, கிரிவலப்பாதை ஆய்வு, கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் எ வ.வேலு , சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன்மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறும்போது, தீபத்திருவிழாவை பொறுத்தவரையில், இது கொரோனா காலம் என்பதால் அனைத்து விதமான சூழ்நிலைகளையும் ஆராய்ந்த பின்னர் தான் ஒரு முடிவுக்கு வர முடியும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஓராண்டுக்குள் செய்து கொடுக்கப்படும். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குளங்கள் ஆக்கிரமிப்புகள் இருந்தால் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தால் அஷ்ட லிங்க கோவில்களும் திருப்பணிக்கு எடுத்து கொள்ளப்படும் என்று கூறினார்.
அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் முதலமைச்சருக்கு அடுத்தபடியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் செய்திதான் செய்தித்தாள்களில் தினமும் வருவதைப் பார்க்கிறேன். அந்தளவுக்கு உழைக்கிறார். கோரிக்கை விடுத்த 48 மணி நேரத்தில் உடனடியாக செய்து தந்துவிடுகிறார்.
என்னிடம் ஒரு கோரிக்கை வந்தால் அது செய்ய முடியுமா? முடியாதா? என்ன சிக்கல், துறை செயலாளர் என்ன சொல்கிறார் என அறிந்து கொள்ளவே குறைந்தது 15 நாட்களாகிறது. இவர் 48 மணி நேரத்தில் கோரிக்கையை நிறைவேற்றிவிடுகிறார் என புகழ்ந்தார்
உடனடியாக செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் வேலு கேட்டு எதையும் இல்லையென எங்களால் சொல்லமுடியாது. அதனால் அவர் மாவட்டத்தில் எங்கள் துறையில்அவர் கேட்டதெல்லாம் செய்து தரப்படும் எனப் பதிலுக்குப் புகழ்ந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu