பர்வதமலை அடிப்படை வசதிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு
பர்வதமலையில் ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை.
பர்வதமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரம் கொண்டது. திருவண்ணாமலையைவிட இந்த மலை உயரம். திருவண்ணாமலையை கிரிவலம் வரும் தூரம் 14 கிலோமீட்டர். ஆனால், பர்வதமலை கிரிவலப் பாதையின் தூரம் 26 கிலோமீட்டர்.
இந்த மலையின் மீது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மல்லிகாஜூர்னேஸ்வரர் சுவாமி சிவன் கோயில் அமைந்துள்ளது, இங்கு வரும் பக்தர்களுக்கும் அபிஷேகம் செய்வதற்கும் தண்ணீர்வசதி, சாலைவசதி, விளக்குவசதி போன்ற அடிப்படை வசதிகள் அமைத்து தர கோரிக்கை வைத்திருந்தனர்.
மேலும், மலைக்குச் செல்லும் பாதைகளில் ஆபத்தான இடங்களில் கம்பி வலையினால் பாதுகாப்பு செய்யப்பட்டிருப்பதும் வலுவான கடப்பாரை பிடித்துக் கொண்டு செல்ல வசதி இருப்பதால் பக்தர்கள் தற்போது சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பர்வதமலை அடிப்படை வசதிகள் குறித்து திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை ஆய்வு செய்தார். உடன் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெசுதி.சரவணன். நெடுஞ்சாலை துறையினர், வருவாய் அலுவலர்கள் சென்றனர்.
அப்பகுதியை ஆய்வு செய்தபோது இதற்கு மாற்றாக வயதானவர்களும் செல்லும் வகையில் பாதை அமைக்க முடியுமா என நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களிடம் வழிவகை உள்ளதா என கண்டறியுமாறும் சி.என்.அண்ணாதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu