கலசப்பாக்கத்தில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

மருத்துவ முகாமை துவக்கி வைத்து அண்ணாதுரை எம்.பி. பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை எம்.பி. அண்ணாதுரை, எம்.எல்.ஏ. சரவணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து அண்ணாதுரை எம்.பி. பேசியதாவது:-
தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கல்விக்கும் மருத்துவத்திற்கும் தனி முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருகிறார். இதன் காரணமாக கல்வியிலும் மருத்துவத்திலும் நாம் முன்னோக்கி செல்கிறோம். மேலும் புத்தாண்டு பிறந்து கலசப்பாக்கம் தொகுதியில் இது முதல் மருத்துவ முகாமாகும் முகாமில் அதிக அளவு பெண்கள் கலந்து கொண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நமது மாவட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து துறைகளின் பணிகளும் சிறந்து விளங்கி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. சரவணன் பேசும்போது கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். அதை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் .அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். விரைவில் 100 வது சுகாதார நிலையம் படவேட்டில் அமைய உள்ளது என்பதை நான் பெரும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் பொதுமக்களுக்கு இரத்தத்தில் இரும்பு சத்தத்தின் அளவு ,கொழுப்பின் அளவு, இரத்த அழுத்த பரிசோதனை, இரத்த மற்றும் சிறுநீரில் உப்பு சர்க்கரை அளவுகள் போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்கள், ஒன்றிய குழு துணை தலைவர்கள், ஒன்றிய செயலாளர் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள் ,வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu