கலசப்பாக்கத்தில் மனு நீதிநாள் முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கலசப்பாக்கத்தில்  மனு நீதிநாள் முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய டிஆர்ஓ மற்றும் எம்எல்ஏ

கலசப்பாக்கத்தில் நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் 593 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், மேல்வில்வராயநல்லூா், மேலாரணி ஊராட்சியில் பொது மக்களுக்கான மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ராம்பிரதீபன் தலைமை வகித்தாா். ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் ராஜ ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சமூக பாதுகாப்பு திட்ட அலுவலா் முனுசாமி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ சரவணன் பங்கேற்று 593 பயனாளிகளுக்கு பட்டா உட்பிரிவு மாற்றம், பட்டா மாற்றம், புதிய குடும்ப அட்டை ஆகிய நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், திமுக ஒன்றியச் செயலா்கள் சிவக்குமாா், சுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ஆதரவற்ற பெண்களுக்கான சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்

கலசப்பாக்கம் அருகே ஆதரவற்ற பெண்களுக்கான சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் உரிமைத்தொகை சார்பில் 2024- 25 ஆம் நிதி ஆண்டில் கைம்பெண்கள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள் ஆதரவற்ற பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கள் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் , மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் சரண்யா அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கையேட்டினை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது, கைம்பெண்கள் யாரையும் எதிர்பார்க்காமல் தாங்களாகவே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என திமுக ஆட்சியில் எல்லா பெண்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியாவிலே தமிழகத்தில் மட்டும் தான் பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பெண்களின் பாதுகாப்புக்காக இந்த அரசு செயல்படுகிறது. பெண்களுக்கு முதல் முதலில் வாக்குரிமை பெற்று தந்தவர் கலைஞர் தான். மகளிர் நலனில் அக்கறை கொண்ட அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது . இந்த அரசுக்கு என்றைக்கும் துணையாக இருக்கவேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் தியாகராஜன், மாவட்ட மேலாளர் தாட்கோ ஏழுமலை, மாவட்ட திட்ட அலுவலர் மீனாம்பிகை, ஒன்றிய கவுன்சிலர் கலையரசிதுரை ,ஊராட்சி மன்ற தலைவர்கள்,மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கலைச்செல்வி, பெண்கள் பாதுகாப்பு அலுவலர் கோமதி, கைம்பெண்கள் நல வாரிய உறுப்பினர் விஜயலட்சுமி, உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!