திருவண்ணாமலை அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக திருவிழாவில் கலசங்களுக்கு புனித நீரூற்றிய சிவாச்சாரியார்கள்.
திருவண்ணாமலையை அடுத்த மல்லவாடி, சந்தைமேடு பகுதியில் நடைபெற்ற 45 உயர ஸ்ரீஆஞ்சநேயா் சிலை கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள மல்லவாடி ஊராட்சியில் சந்தை மேட்டின் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில் சுமார் 45 கோடி உயரம் கொண்ட கோவில் உள்ளது.
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஞ்சநேயர் சிலைக்கு மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் மங்கல இசையுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு விக்னேஸ்வர பூஜை சுதர்சன ஹோமம் ஆகியன நடைபெற்றது. மாலை மங்கல இசை, வாஸ்து சாந்தி, சிறப்பு ஹோமம், அங்குராா்ப்பணம், முதற்கால யாக சாலை பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது.
நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோ பூஜை, திருப்பள்ளி எழுச்சி, யாக பூஜை , மகா சாந்தி கிட்ட பந்தனம் சான்றுதல் திருமங்கலம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 8 மணி அளவில் மகா சம்ப்ரோஷ்ணம் பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, யாக சாலையில் வைக்கப்பட்டு இருந்து புனித நீா் அடங்கிய கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு 45 அடி உயர ஆஞ்சநேயா் சிலை உச்சியில் புனித நீா் ஊற்றி சிவாச்சாரியா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினா்.
இதேவேளையில், கோயிலில் உள்ள மூலவா் ஸ்ரீராமா், ஸ்ரீலஷ்மணா், ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலைகளுக்கும் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, திரண்டிருந்த பக்தா்கள் 'ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்' என்று முழங்கி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு கோயில் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து, நேற்று இரவு சீதாராமா் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இவ்விழாவில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி , ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், கோவில் அறங்காவலர்கள் , ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu