கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
தாய்மார்களுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கிய துணை சபாநாயகர்
துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள சானானந்தல் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள சானானந்தல் ஊராட்சியில் நேற்று கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜா, அனைவரையும் வரவேற்றார்.
கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப் பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி பேசியதாவது,
கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமில் ஏழை எளிய மக்கள் சுலபமான முறையில் தங்களின் உடல்நிலை பாதுகாத்துக் கொள்வதற்கும், உடல்நலத்தைபரிசோதனை செய்து கொள்வதற்கும் இந்த முகாம் பயன்படுத்துகிறது. இந்த முகாமின் மூலம் கர்ப்பிணி தாய்மார்கள் மார்பக புற்றுநோய், இரத்த அழுத்த பரிசோதனை, நுரையீரல் பாதிப்பு, சர்க்கரை அளவு, உப்பின் அளவு, கண்பரிசோதனை, இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு, இசிஜி பரிசோதனை, போன்ற சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இதில் ஏராளமான மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். மேலும் உயர் சிகிச்சைகளுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற உயர் சிகிச்சைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் நீங்களும் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறுங்கள் இதற்காக தான் உங்கள் ஊரில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது என சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கூறினார் .
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பாலு, ஒன்றிய குழு துணை தலைவர் உஷாராணி சதாசிவம், மாவட்ட கவுன்சிலர் சகாதேவன், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபாகரன், செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி பாரதிதாசன், மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu