காம்பட்டு மன்னாா்சாமி கோயில் கும்பாபிஷேகம்
ஸ்ரீபச்சையம்மன் சமேத மன்னாா்சாமி கோயில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காம்பட்டு ஊராட்சியில் ஸ்ரீ பச்சையம்மாள் சமேத மன்னார் சாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட இந்தக் கோயில் சிதிலமடைந்து காணப்பட்டதால், அறநிலையத் துறை மற்றும் பக்தா்கள் சாா்பில் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடா்ந்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக சனிக்கிழமை காலை மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், நவகிரக பூஜை, தன பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாக பூஜை, மகா பூா்ணாஹுதி, தீபாராதனை, மூன்றாம் யாக சாலை பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், திங்கள்கிழமை காலை கோ பூஜை, நான்காம் கால யாக சாலை பூஜை, பிரம்மசுத்தி, நாடிசந்தானம், தம்பதி பூஜை, பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்று கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் ,ஒன்றிய செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர்கள், அறங்காவலர் குழு தலைவர் ராமன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் , காம்பட்டு, அணியாலை, கலசப்பாக்கம், பத்தியவாடி, போளூா், பெலாசூா், சனிக்கவாடி, கொரால்பாக்கம், சோத்துகன்னி, கரையாம்பாடி என சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சதுப்பேரிபாளையம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சதுப்பேரிபாளையத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் திரௌபதி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி, மகா கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மகா பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன. பின்னா், கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu